டப்பிங் யூனியன்
தேர்தலில் நடிகர்
ராதாரவி
தலைமையிலான வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு ஃபெஃப்ஸி தலைவரும் இயக்குநருமான
ஆர்கே செல்வமணி
இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மீண்டும் டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி… பதவி பிரமாணம் செய்து வைத்த ஆர்கே செல்வமணி!
டப்பிங் யூனியன் தலைவராக பதவி ஏற்றள்ள நடிகர் ராதாரவி நன்றியுரை ஆற்றினார். அப்போது டப்பிங் யூனியனில் தனக்கு எதிராக கொடிப்பிடித்தவர்கள் குறித்தும் இயக்குநர் சங்க தேர்தல் குறித்தும் காரசாரமாக பேசினார்.
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் மலரும் காதல்? நிரூப்புக்கு முத்தம் கொடுத்த அபிராமி.. வைரலாகும் வீடியோ!
அவர் பேசியதாவது, நான் குடும்பமாக நினைக்கும் பெப்சியை சேர்ந்தவர்கள் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இன்று பெப்சி நல்ல நிலைமையில் இருக்க செல்வமணி முக்கிய காராணம், அவர் எனக்கு ஒரு அறிவுரை சொன்னார், பிரச்சனை வந்தால் கூப்பிட்டு பேசுங்கள் என்றார் அது தவறு, பிரச்சனை என்பது வந்தவுடன் போய்விடும், அதையெல்லாம் கண்டுகொள்ள கூடாது, பிரச்சனையுடன் உறவாடகூடாது.
அந்த இயக்குனரா… ஆளை விடுங்க சாமி.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!
என்னை எதிர்த்தவர்களால் தான் என் நிலை இங்கு என்ன என்பது, இன்று எனக்கு தெரிந்துள்ளது, அதனால் அவர்களுக்கு நன்றி. நான் சேர்த்தவர்கள் தான் என்னை எதிர்த்து கேஸ் போட்டார்கள், எல்லாமே நான் பார்த்து சேர்த்தவர்கள், இப்போது எங்களை எதிர்த்து நின்றவர்கள் எல்லோருக்குமே டெபாசிட் போய் விட்டது.
பரோட்டாவுக்கு மாவு பிசையிறாங்களா? வலிமை பாடலை கிண்டலடித்து வாங்கிக்கட்டும் ப்ளு சட்டை!
டைரக்டர் யூனியனிலே பிரச்சனையா? அப்போ டப்பிங் யூனியனிலும் இருக்கும்பா என்கிறார்கள். நாய் குலைக்குதேனு சிங்கம் குலைக்க முடியாது. இதை புரிந்து கொள்ள வேண்டும். இயக்குநர் சங்க தேர்தல் கேள்விப்பட்டு நான் வருத்தப்பட்டேன். செல்வமணி ஜெயிப்பார் கவலைப்பட வேண்டாம், நம்முடன் நிறைய வல்லவர்கள் இருக்கிறார்கள்.இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
அத சொன்னா controversy ஆகுமா தெரியல – கிருத்திகா உதயநிதி!