நேட்டோ அமைப்பில் சேர முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளை ரஷ்யா எச்சரித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் திட்டமிட்டதைத் தொடர்ந்து அதன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, மேலும் சில நாடுகளை எச்சரித்துள்ளது . இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போட்டால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் மேற்கத்திய நாடுகளையும் அவர் எச்சரித்துள்ளார்.