மாஸ்கோ: பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு சொந்தமாக ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.
உக்ரைன் மீது 3வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து , அமெரிக்கா, பிரிட்டன் , ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய பரிசீலனை செய்யப்படும். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
மாஸ்கோ: பொருளாதார தடை விதித்த நாடுகளுக்கு சொந்தமாக ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது.உக்ரைன் மீது 3வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.