‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது
கமல்ஹாசன்
நடிப்பில் ‘
விக்ரம்
‘ படத்தை இயக்கி முடித்துள்ளார்
லோகேஷ் கனகராஜ்
. கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ‘விக்ரம்’ படம் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய
விஜய் சேதுபதி
, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில்
பகத் பாசில்
நடிக்கிறார். மேலும் படப்பிடிப்பு துவங்கிய பின்னர் காளிதாஸ் ஜெயராமும் ‘விக்ரம்’ படத்தில் இணைந்தார்.
‘விக்ரம்’ படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதன படப்பிடிப்பு சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை: ‘வலிமை’ படம் புரிந்த சாதனை..!
அதனை தொடர்ந்து கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். கையில் துப்பாக்கியை வைத்து கொண்டு கமல் நிற்கும் ஸ்டைலிஷ் போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து படத்தின் முதல் பார்வையும் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் ‘விக்ரம்’ தற்போது படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் கமலின் ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ என்ற பாடல் ஒலிக்கவிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில் ஒரே வாரத்தில் கமல் ‘விக்ரம்’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னிப்பு கேட்ட விஜய்; என்ன காரணம் தெரியுமா?