பிக்பாஸ் அல்டிமேட்: பாலாஜி முருகதாஸ் முகத்திரையை கிழித்த சனம் ஷெட்டி!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சமீபத்திய டாஸ்க் ஒன்றில் தன் வாழ்வை மாற்றிய தேவதை அல்லது பேய் யார்? என்ற கேள்விக்கு பலரும் பதில் கூறினர். அதில் பேசிய பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் சீசன் 4-ல் நடைபெற்ற சம்பவத்தை கூறி சனம் ஷெட்டி தான், தன் வாழ்வை மாற்றிய பேய் என்று குற்றம் சாட்டினார். தான் சொல்லாததை சொன்னதாய் கூறி சமூகத்தில் குறிப்பாக பெண்கள் மத்தியில் தன் பெயரை சனம் ஷெட்டி கெடுத்துவிட்டதாக புகார் கூறினார்.
இதை பார்த்த சனம் ஷெட்டி, தனது வலைதளத்தில் தக்க வீடியோ ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளதோடு தனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். மேலும் சில போட்டியாளர்கள் என் மீது சுமத்தி இருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி எனக்கு பல அழைப்புகள் வந்து விட்டது. அவர்களது கேம் பாதிக்கக் கூடாது என சொல்லி நான் இதுவரை எந்த ரியாக்சனும் கொடுக்கவில்லை. ஆனால், இன்று என் நேர்மையே கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன நடந்தது என்பதற்கு பாலாஜி சொன்னதை அருகிலிருந்த கேட்ட ஆரி சாட்சிக்கு இருக்கிறார் என்று சனம் கூறி இருக்கிறார்.
அந்த வீடியோ பதிவில், பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி பற்றி பேசும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வீடியோவும் அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4-ல் ஆரி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் மற்றும் பாலாஜி முருகதாஸ் பற்றி பேசும் வீடியோ காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதில், ஆரியும், சுரேஷ் சக்கரவர்த்தியும், சனம் ஷெட்டி விஷயத்தில் பாலாஜி முருகதாஸ் மீது தான் தவறு என பேசிக் கொள்கின்றனர்.
முன்னதாக பிக்பாஸ் சீசன் 4-ல் பாலாஜி மற்றும் சனம் ஷெட்டி விளையாடி வந்தனர். அந்த சீசனில் சனம் ஷெட்டி அழகி போட்டியில் பங்கேற்றதை வைத்து சில குற்றச்சாட்டுகளை பாலாஜி முருகதாஸ் கூறியிருந்ததாக பெரும் பிரச்னை எழுந்தது. அப்போது பாலாஜி முருகதாஸ் அதுபோல் தான் எதுவும் சொல்லவே இல்லை என மறுத்தார். இதனால் சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸூக்கு இடையே பிரச்னை எழுந்தது. இந்த சீசனில் அதை மீண்டும் கிளறி சனம் ஷெட்டியை தாக்க முயன்ற பாலாஜியை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார் சனம் ஷெட்டி.