
பெண்களை தவறாக பயன்படுத்தும் இயக்குனர்கள்: பூனம் கவுர்
தென்னிந்திய நடிகையான பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம், உன்னைப்போல் ஒருவன், 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனிவழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூனம் கவுர், ராம்கோபால் வர்மா இயக்கதில் அட்டாக் என்ற படத்தில் நடித்தார்.
மீ டூ புகார்கள் பிரபலமாக இருந்த நேரத்தில் ராம்கோபால் வர்மா தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்தியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் தகூறியிருப்பதாவது: இந்த இருவருமே நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள். நடப்பதெல்லாம் தெரியாதது போன்று புன்னகை செய்துகொண்டே தனிப்பட்ட நலனுக்காக மற்றவர்களை தவறாக பயன்படுத்துகிறார்கள். இரு இயக்குனர்களுமே பெண்களை தவறாக பயன்படுத்தும் புரோக்கர்கள். என்று கூறியுள்ளார்.
பூனம் குறிப்பிடும் இரு இயக்குனர்களில் ஒருவர் ராம்கோபால் வர்மா என்பது வெளிப்படையாக தெரிகிறது. மற்றொருவர் யார் என்று தெரியவில்லை.