உக்ரைனில் திருமணம் ஆன சில மணிநேரங்களில் புது தம்பதியினர், நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி போருக்கு தயாராகியுள்ளனர்.
உக்ரைனைச் சேர்ந்த 24 வயது ஸ்வயடோஸ்லாவ் பர்சின் (Svyatoslav Fursin) மற்றும் 21 வயது யரினா எரிவா (Yaryna Arieva) என்கிற ஜோடி வருகிற மே மாதம் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் வியாழக்கிழமையன்று ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை அறிவித்தார்.
இதனால் ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கியது. தொடர்த்து 2-வது நாளாக வெள்ளிக்கிழமையும் உக்கிரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பர்சின், யரினா தம்பதி தற்போது போருக்கு நடுவே வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்திற்கு இடையே கீவ்வில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
Facebook: Ярина Ар’єва
இருவரும் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிகளில் தங்களில் ஈடுபடுத்திக்கொள்ள அவசர அவசரமாக திருமணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய யரினா, நிச்சயம் தாக்குதலின் பயத்திலிருந்து விடுபட்டு ஒருநாள் எங்கள் திருமணத்தை கொண்டாட முடியும் என்று கூறினார்.
உக்ரைனின் புதுத்தம்பதியான இவர்கள், இப்போது கையில் துப்பாக்கி ஏந்தி ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதல் கொடுக்க தயாராகிவிட்டனர். அவர்களது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
(Christian Streib/CNN)
Courtesy Yaryna Arieva)