அமெரிக்காவின் உள்நோக்கத்திற்கு அடி பணிந்து போகத் தயாராக இருக்கும் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலின்ஸ்கி, ரஷ்யாவின் உண்மையான கவலைகளை புறம் தள்ளி விட்டு அந்த நாட்டுடன் மோதல் போக்கில் ஈடுபட்டிருப்பதுதான் உக்ரைன் செய்த பெரிய தவறு. தனது தவறுகளை உணர்ந்து ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட உக்ரைன் முன்வந்தால் மட்டுமே போர் நிற்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
உளவாளியாக இருந்து அரசியலில் புகுந்து அதிபரானவர் புடின். இதுவரை நாம் பார்த்த ரஷ்ய அதிபர்களிலேயே மிக மிக வித்தியாசமானவர். அமெரிக்காவுக்கு எதிராக புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி வந்தவர் புடின்.
உக்ரைன் நாட்டின் சமீபத்திய செயல்பாடுகளின் பின்னணியில்
அமெரிக்கா
உள்ளது. அமெரிக்காதான், ரஷ்யாவுக்கு செக் வைக்கும் வகையில் உக்ரைனைத் தூண்டி விட்டு ரஷ்யாவுடன் மோத விட்டு வேடிக்கை பார்த்தது. இதுபோன்ற குள்ள நரித்தன வேலைகளுக்குப் பெயர் போனது அமெரிக்கா என்பது உலகத்துக்கே நன்கு தெரியும்.
எனக்கு குறி வச்சிருச்சு ரஷ்யா.. அழிக்கப் போறாங்க.. உக்ரைன் அதிபர் அலறல்
ரஷ்யாவைப் பொறுத்தவரை பரப்பளவில் மிகப் பெரிய நாடு. மிகப் பெரிய பரந்து பட்ட ரஷ்ய நாடு துருவப் பிரதேசத்திற்கு அருகில் இருப்பதால் வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் உறையும் பனியில்தான இருக்க வேண்டியுள்ளது. ரஷ்ய நாட்டின் துறைமுகங்கள் எல்லாம் வருடத்திற்கு பல மாதங்களுக்கு செயல்பட முடியாத நிலையில்தான் இருக்கும். கருங்கடல் மார்க்கமாக மட்டுமே ரஷ்யாவால் சர்வதேச கப்பல் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த பிரதேசத்தில் ரஷ்யாவின் ஆதிக்கம் இல்லை. காரணம், சோவியத் யூனியன் உடைந்து நாடுகள் தனித் தனியாக பிரிந்தபோது உக்ரைன் வசம் கருங்கடல் பிரதேசம் போய் விட்டது. இது ரஷ்யாவுக்கு பெரும் பாதகமாகி விட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஏற்பட்ட இந்த பாதகமான நிலையைப் பயன்படுத்தி அதை முடக்க முயன்றது அமெரிக்கா. அதற்கு தோதாக வந்து சேர்ந்த நாடுதான் உக்ரைன். அந்த நாட்டுக்கு பல உதவிகளைச்செய்ததோடு,
நேட்டோ
அமைப்பிலும் சேர்க்க அமெரிக்கா துடிக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்து விட்டால் உக்ரைன் நாட்டுக்குள் நேட்டோ படையினரை கொண்டு வந்து நிறுத்தி விட முடியும். இது ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஆபத்தாக மாறி விடும்.
நேட்டோ படையினர் வந்து விட்டால் உக்ரைனும் துள்ளிக் குதிக்க ஆரம்பிக்கும். அமெரிக்கா, நேட்டோ படைகள் இருக்கும் தைரியத்தில் ரஷ்யாவிடம் அது வாலாட்ட முனையும். அக்கம் பக்கத்து குட்டி நாடுகளை வளைக்க முயலும். இதெல்லாம் நடந்தால் தனக்கு சிக்கலாகி விடும். உக்ரைனைத் தாக்க முயன்றால் நேட்டோ படைகளுடன் மோத நேரிடும் என்பதால் கூட்டிக் கழித்துப் பார்த்து உக்ரைனை உருத்தெரியாமல் அழிக்கும் வேலையில் இறங்கி விட்டார் புடின்.
கொதிக்கும் போர்க்களம்.. உக்கிரத்தில் உக்ரைன்.. முகிழ்த்து நின்ற காதல் பூ!
புடின் அடிப்படையில் ஒரு ரகசிய ஏஜென்ட். அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். எனவே மிக மிக தெளிவாக திட்டமிட்டுத்தான் அவர் தாக்குதலில் இறங்கியிருக்க முடியும். அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளும் கூட ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. அதையெல்லாம் முன்கூட்டியே யோசித்து விட்டுத்தான் களம் இறங்கியிருக்கிறார் புடின் என்று சொல்கிறார்கள்.
இந்தப் போரில் சீனா, ரஷ்யா பக்கம் நிற்கிறது. ரஷ்யாவுக்கு வரும் சிக்கல்களுக்கெல்லாம் கை கொடுக்க சீனா தயாராக உள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாத வகையில் வர்த்தக துறையில் கை கொடுக்க சீனா தயாராக உள்ளது. எல்லாம் பேசி வைத்து விட்டுத்தான் களத்தில் குதித்திருக்கிறார் புடின். அதை விட முக்கியமாக அமெரிக்காவால் ஒரு அளவுக்கு மேல் ரஷ்யாவை நெருக்க முடியாது. காரணம், புடின் வில்லங்கமானவர் என்பதால். எனவே பார்த்துப் பார்த்துத்தான் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க முடியும். பிற நாடுகளிடம் வாலாட்டுவது போல ரஷ்யாவிடம் அமெரிக்கா வாலாட்ட முடியாததற்கு இதுதான் காரணம்.
இயற்கை எரிவாயு ரஷ்யாவின் ஆயுதங்களில் ஒன்று. உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை நம்பித்தான் உள்ளன. எனவே பல நாடுகளும் அமெரிக்கா பின்னால் அணிவகுக்காமல் நிற்க அதுதான் காரணம். இதனால்தான் தனக்கு எந்த நாடும் உதவ முன்வரவில்லை என்று உக்ரைன் அதிபரும் புலம்பியுள்ளார். தற்போதைய போருக்கு அமெரிக்காவின் மறைமுக தலையீடு, உக்ரைனின் தேவையில்லாத பிடிவாதம் ஆகியவைதான் காரணம் என்பது பலரின் குற்றச்சாட்டாகும்.
உக்ரைன் காட்டிய பிடிவாதம் மற்றும் அதீத கோபம் ஆகியவைதான் ரஷ்யாவைத் தூண்டி விட்டு விட்டதாக கூறுகிறார்கள். எனவே உக்ரைன் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு விட்டு. நேட்டோவில் சேருவது இல்லை என்று அறிவித்தாலே போதும், ரஷ்யா பின்வாங்கி விட்டு போய் விடும். உக்ரைனுடன் ரஷ்யாவுக்கு வேறு எந்த கோபமும், மோதலும் இல்லை. நேட்டோ என்ற ஒற்றை வார்த்தைதான் ரஷ்யாவை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. எனவே உக்ரைன் இறங்கி வந்தால் மட்டுமே இந்த போர் நிற்கும் என்பது அனைவரின் கருத்தாகும்.