நடிகர்
ரஜினி
தற்போது
நெல்சன்
இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். தற்போது பீஸ்ட் படவேலைகளில் பிஸியாக இருப்பதால் அதை முடித்திருவிட்டு ரஜினியின் படவேலைகளை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்தினால் மனமுடைந்த ரஜினி வீட்டிலேயே தனிமையில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். அதன் பிறகு இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று கருதிய ரஜினி தன் கவனத்தை படங்களில் செலுத்த முடிவெடுத்தார்.
விஜய்கிட்ட பணம் வாங்கிட்டு போலீஸ் இதெல்லாம் செய்றாங்க…இதென்ன புது உருட்டா இருக்கு..!
கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார் ரஜினி. எனவேதான் இளம் இயக்குனரான நெல்சனின் கூட்டணில் பணியாற்ற முடிவெடுத்த ரஜினி அதன் அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.
படு ஸ்டைலாக அந்த ப்ரோமோவில் தோன்றும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் இப்படத்தின் மீது உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
அனிருத்
இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று ரஜினி மற்றும்
லதா
ஜோடிகளின் திருமண நாளை முன்னிட்டு பல ரசிகர்களும் திரைபிரபலன்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன்பு நின்று அவர்கள் வாழ்த்தை தெரிவிக்கவும், ரஜினியை காணவும் காத்திருந்தனர்.
அவர்களுக்காக ரஜினி வீட்டின் வெளியே வந்து தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்தார். ரஜினியை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூகத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது குறிப்பிடத்தக்கது.
ரஜினி என்னை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார் – இயக்குனர் சுசீந்திரன்!