ரஷ்ய படைகள் 2வது நாள் போரில் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கியுள்ள வேளையில் மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது கடுமையாக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருகிறது.
ரீடைல் பணவீக்கம் 6 மாத உயர்வு..!
இந்தச் சூழ்நிலையில் சர்வதேச நிதியியல் தளத்தில் இருந்து ரஷ்யாவின் இணைப்பை மொத்தமாக நீக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன்
ரஷ்யா மிகப்பெரிய தடை பாதிப்புகள் உடன் உக்ரைன் நாட்டைக் கைப்பற்ற போகிறது. இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பாதிப்புகளை எதிர்கொண்டாலும் இந்தியா தான் அதிகளவில் பாதிக்கப்படப் போகிறது என நோமூரா தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள உலக நாடுகள் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் சிக்கியுள்ளது. இந்தப் பிரச்சனை ரஷ்யா – உக்ரைன் தாண்டி ரஷ்யா – மேற்கத்திய நாடுகள் மத்தியிலான பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி
இந்நிலையில் இரு நாடுகள் மத்தியிலான போர் எப்போது முடியும் என்பது இன்னும் தெரியாத நிலையில் நோமூரா அமைப்பின் ஆய்வறிக்கை இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வளர்ச்சி குறைந்தபட்சம் 0.22 சதவீதம் வரையில் பாதிகக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 சதவீதம் அதிகரித்து ஒரு பேரல் விலை 105 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வின் மூலம் ஆசிய நாடுகளில் உணவு பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரிக்கும்.
ஆசிய நாடுகள்
இதனால் ஆசிய நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து, நடப்பு கணக்குப் பற்றாக்குறை மோசமட்டைந்து, அன்னிய செலவாணி அதிகம் பாதிக்கப்படும். இதன் வாயிலாகப் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளும் கடுமையான சரிவை எதிர்கொள்ளும் எனக் கணிக்குப்பட்டு உள்ளதாக நோமூரா அமைப்பின்
ஆரோதீப் நந்தி மற்றும் சோனல் வர்மா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்தியா – இந்தோனேசியா
இதன் மூலம் ஆசிய சந்தையில் ஆதிகம் பாதிக்கப்படப் போகும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தையும், இந்தியாவைத் தொடர்ந்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகியவை அதிகம் பாதிக்கப்படும், இதேவேளையில் இந்தோனேசியா இந்த இக்கட்டான சூழ்நிலையில் பலன் பெறும் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
Russia-Ukraine crisis: India will be impact adversely in Asia
Russia-Ukraine crisis: India will be impact adversely in Asia ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியாவுக்குத் தான் அதிகம் பாதிப்பு.. எப்படித் தெரியுமா..?