ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அதிபர் புதின், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோ உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போரைத் தொடர்ந்து நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஒருமித்த ஆதரவைத் தெரிவித்தன.
தேவையில்லாத தூண்டுதல் இல்லாத போரைத் தொடங்கிய புதினுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபரின் ஆலோசனைகளைக் கேட்டுள்ளதாக ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உருசுலா தெரிவித்துள்ளார்.