ராகுல் காந்தி வருகை அறிவிப்பு பிரஸ்மீட்டில் ரகளை: காங்கிரஸார் தள்ளுமுள்ளு

Clash in Tamilnadu congress press meet for Rahul visit announcement: ராகுல் காந்தியின் தமிழகம் வருகை குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருக்கிறார். ராகுல் காந்தியின் இந்த ஒரு நாள் பயணம் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் சந்திப்பு இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த சந்திப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர் ரகளையில் ஈடுபட்டததால், காங்கிரஸ் கட்சியினருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வழக்கமாக காங்கிரஸ் கட்சியின் கூட்டம் அல்லது செய்தியாளர் சந்திப்பு என்றால், அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் மேடையில் அமர்ந்திருப்பர். அந்த வகையில் இன்றும் அவ்வாறு அமர்ந்து சந்திப்பு நிகழ்ந்துக் கொண்டிருக்கையில், காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சியின் முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், தற்போதைய தலைவர் முனுசாமி மேடையில் அமர்ந்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்ற காங்கிரஸ் தலைவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

இதையும் படியுங்கள்: கடற்கரை தாது மணல் ஏற்றுமதி இழப்பு; தனியார் நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு

காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவரின் செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியினர் மோதிக் கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.