சென்னை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஜாலியாக காணப்படுகின்றனர். ஏற்கனவே பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி போன்றோர் கடந்த சில மாதங் களாக பரோலில் வெளியே வந்து சந்தோஷமாக உள்ள நிலையில், நளிளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-இல் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி. இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், நளினி ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க வேண்டி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் பொறுப்பேற்ற நாள் முதல் எழுவர் விடுதலை தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கத்தில் சட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் (அதிமுக அரசு) கடந்த 2018-இல் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் மூலம் சமிபத்தில் வலியுறுத்தி இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய மத்தியஅரசு மறுத்து வருகிறது.நாட்டின் தலைவர் ஒருவரின் கொலைக்கு காரணமாக இருந்துள்ள இவர்கள் விடுதலை செய்தால், இது அடுத்தடுத்துவரும் நிகழ்வுகளுக்கும் முன்னுதாரணமாகி விடும் என்று கூறி, விடுதலை செய்ய மறுத்து வருகிறது.
ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் வலியுறுத்தலின் பேரில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழகஅரசு பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வருகிறது. ஆனால், அதை கவர்னரும், குடியரசு தலைவரும் ஏற்க மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தொடர்ந்து ஜாமின் வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 10 மாதங்களாக பேரறிவாளன் பரோலில் வெளியே வந்து ஜாலியாக உள்ள நிலையில், மற்றொர குற்றவாளியான ரவிச்சந்திரனும் கடந்த 3 மாதமாக பரோலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது நளினிக்கும் 2வது மாதமாக பரோலை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது.
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி டிசம்பர் மாதம் 27-ம் தேதி அவரது தாயார் பத்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி 30 நாள் பரோலில் கடந்த வெளியே வந்தார். இதற்கிடையில் நளினிக்கு 2-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆனால், திமுக சார்பில் 7 பேர் விடுதலை குடியரசு தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு துளி அளவரும் உடன்பாடு கிடையாது. குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதை நீதிமன்றங்கள் தான் செய்ய வேண்டுமே தவிர அரசியல் ரீதியிலான அழுத்தம் கொடுக்க கூடாது” என மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்திருந்தார். அதுபோல, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி “எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம் அது மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என கொந்தளித்திருந்தார்.
ஆனால், தற்போது ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் பரோல் என்ற பெயரில் வெளியே ஜாலியாக இருப்பதற்கு எந்தவொரு காங்கிரஸ் தொண்டரோ, தலைவரோ கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது கேலிக்குரியதாக உள்ளது.