உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளோம் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். ருமேனியாவில் இருந்து 219 உக்ரைன் பயணிகளுடன் இந்திய விமானம் கிளம்பியுள்ளது. இன்று இரவுக்குள் மும்பை வந்து சேரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
3வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. மெலிடோபோல் நகரை கைப்பற்றியதாக கூறியுள்ள ரஷ்யா, கீவ் வில் உள்ள நீர் அணுமின் நிலையத்தையும் கைப்பற்றிவிட்டதாக கூறியுள்ளது.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம் ருமேனியாவின் புகாரெஸ்ட் (Bucharest) நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அங்கிருந்து 219 இந்தியர்களுடன் முதல் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மதியம் 1.55 மணிக்கு மும்பை புறப்பட்டது.
இரவு 9 மணியளவில் விமானம் மும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து சென்ற 2வது சிறப்பு மீட்பு விமானம் 250 இந்தியர்களுடன் ஞாயிறு அதிகாலை நாடு திரும்ப உள்ளது.
இந்நிலையில், கீவ் நகரில் குடியிருப்பு பகுதிகளில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நகர மேயர் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், 5 மாடிகள் சேதமடைந்தன. இடிபாடுகள் தெருக்களில் சிதறி கிடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு வருகின்றனர்.
Advertisement