மும்பை: ருமேனியாவில் இருந்து இந்திய மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்பை வந்தது அவர்களை மத்திய அமைச்சர் வரவேற்றார்.
உக்ரைன் ரஷ்யா இடையே மூன்றாவது நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே உக்ரைனில் பயின்றுவரும் இந்திய மாணவர்கள் ருமேனியா நாடு வழியாக ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இதனையடுத்து உக்ரைனில் இருந்த ருமேனியாவின் புச்சாரெஸ்டிற்கு மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து புச்சாரெஸ்டில் இருந்து 219 மாணவர்களுடன் புறப்பட்ட விமானம் மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மேலும் ஒரு விமானம் இந்தியா புறப்பாடு
முன்னதாக ருமேனியாவில் இருந்து 219 பயணிகளுடன் புறப்பட்ட இந்திய விமானம் மும்பையை வந்தடைந்தது.இந்நிலையில் உக்ரைனில்இருந்து ருமேனியாவிற்கு வந்த இந்தியர்கள் 250 பேரை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இந்தியாவிற்கு புறப்பட்டது. ஏர் இந்தயா விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும் தமிழர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
Advertisement