இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் எப்போதும் இல்லாத வகையில் போட்டி அதிகரித்துள்ள நிலையில் பல புதிய நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களின் வர்த்தகத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் இழந்த வர்த்தகச் சந்தையை மீட்டு எடுக்கவும், புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக 2ஆம், 3ஆம் தர நகரங்கள், டவுன், கிராம பகுதிகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக வெறும் 5 லட்சம் ரூபாயில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. இந்நிலையில் இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலான சேவை அளிக்கவும், பட்ஜெட் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய வேகன் ஆர் காரை அறிமுகம் செய்துள்ளது.
பட்ஜெட் கார்
இன்றைய வர்த்தகச் சந்தைக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்களைச் செய்துள்ள வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 1 லிட்டர் இன்ஜின் கொண்ட வேகன்ஆர் கார் 5.39 – 6.81 லட்சம் ரூபாய்க்கும், 1.2 லிட்டர் இன்ஜின் கொண்ட கார் 5.99 முதல் 7.10 லட்சம் ரூபாயில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை
தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ப்ரீமியம் கார் விற்பனை செய்வதிலும், வாடிக்கையாளர்களைப் பெறுவதிலும் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாகப் பல புதிய நிறுவனங்கள் வந்த பின்பு மாருதி சுசூகி நிறுவனத்தால் இப்பிரிவில் வாடிக்கையாளர்களைப் பெறுவது திண்டாட்டமாக மாறியுள்ளது. இதனால் மாருதி சுசூகி பட்ஜெட் கார் பிரிவை தற்போது குறிவைத்துள்ளது.
24.23 கிலோமீட்டர் மைலேஜ்
மாருதி சுசூகி தற்போது அறிமுகம் செய்துள்ள 1.2 லிட்டர் வேகன்ஆர் கார் சுமார் 24.23 கிலோமீட்டர் மைலேஜ் கொண்டதாக உள்ளது. இது ஏற்கனவே இருக்கும் காரை காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். இதேபோல் தற்போது சந்தைக்கு ஏற்றவாறு சிஎன்ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் பெரிய அளவிலான வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maruti Suzuki’s new WagonR starts at 5.3 lakhs; Best for budget customers
Maruti Suzuki’s new WagonR starts at 5.3 lakhs; Best for budget customers வெறும் 5 லட்சத்தில் கார்.. அசத்த வரும் மாருதி சுசூகி..!