Tamilnadu Update : தமிழக அரசியல் வரலாற்றின் முதல்முறையாக முதல்வரின் பாதுகாப்புக்கு பெண் எஸ்ஐ தலைமையில் 7 பெண் காவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிகழ்வு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு பல்வேறு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கோவில் நிலம் மீட்பு, நீட் தேர்வு விலக்கு மசோதா என சுறுசுறுப்பாக இயங்கி வரும் முதல்வர் ஸ்டாலின் தற்போது முதல் முறையாக தனது பாதுகாப்பு விஷயத்தில் பெண் காவர்களை நியமித்துள்ளார்.
தமிழக காவல்துறையில் முதல்வர் ஸ்டாலினுக்கு, 2 வகையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பெண் காவலர்கள் பிரிவுக்கு கோர்சேல் என்று பெயரிடப்பட்டுள்ளது. சிறந்த காவலர்களை தேர்வு செய்து, எந்த சூழ்நிலையையும திறமைாக எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி கொடுத்து முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
எஸ்பி தலைமையில், ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 3 இன்ஸ்பெக்டர்கள் என தலைமையில், 150 காவலர்கள் பணியாற்றி வரும், இந்த கோர்சேல் பிரிவில், முதல்வரின் பாதுகாப்பு பணிக்காக சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சபாரி உடையுடன் முல்வரின் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகின்றனர். இவர்களை கடந்துதான் முதல்வரை சந்திக்க முடியும்.
அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பதிவிக்கு தற்போது பெண் காவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் காவல்நிலைய பெண் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி, தலைமையில், ஆயுதப்படையை சேர்ந்த கானீஸ்வரி, பவித்ரா, மோனிஷா, சுமதி, ராமி, பவித்ரா, கவுசல்யா உள்ளிட்ட 7 பெண் காவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்புபயிற்சி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சபாரி உடை அணிந்து முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலுமு் இவர்களுக்கென்று தனியாக கார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களை பங்கேற்க செய்வது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை என்பதை ஸ்டாலின் பல்வேறு காலகட்டங்களில் சுட்டிக்காட்டி வருகிறார். இந்த அரசையே திராவிட மாடல் அரசு என்றும் குறிப்பிடுகிறார். அந்த அடிப்படையில் முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பிலும் பெண் போலீசாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை திமுக அரசு எடுத்திருக்கிறது.
முதல்கட்டமாக முதல்வர் பாதுகாப்பு பிரிவில் பெண் போலீசார் சேர்க்கப்படுகிறார்கள் என இதற்கான காரணங்களை அரசு தரப்பில் குறிப்பிடுகிறார்கள்.
“ “