100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முறை: 'வலிமை' படம் புரிந்த சாதனை..!

நடிகர் அஜித்தின் ‘
வலிமை
‘ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான அஜித் படம் என்பதால் ‘வலிமை’ பட ரிலீசை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ரசிகர்களுக்கு நிகராக திரையுலக பிரபலங்களும் ‘வலிமை’ படம் குறித்து இணையத்தில் பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் அஜித்,
எச்.வினோத்
,
போனி கபூர்
கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து அதே கூட்டணியில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘வலிமை’.

அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் ‘வலிமை’ படம் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் மேளதாளத்தோடும், பட்டாசுகளுடனும் ‘வலிமை’ வெளியீட்டை கொண்டாடினார்கள்.

தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கும் சிம்பு: இதென்னய்யா மெஹா ட்விஸ்ட்..!

இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘வலிமை’ படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் ’தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருடத்தில் ‘வலிமை’ மட்டும்தான் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி எல்லா பக்கமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வலிமை’ முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. ரஜினி மற்றும் விஜய் படங்களின் சாதனைகளை முறியடித்து முதல் நாளில் 25 கோடி ரூபாயை ‘வலிமை’ படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை விமர்சனம்; அஜித் ரசிகர்களின் அட்டகாசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.