இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் எந்தக் காலமும் குறையப்போவது இல்லை, பெரும் பணக்காரர்கள், நிறுவனங்கள், அமைப்புகள் முதல் சாமானிய மக்கள் வரையில் அனைத்து தரப்பினரும் தங்கத்தை ஒரு முக்கியமான முதலீடாகப் பார்ப்பது மட்டும் அல்லாமல் முக்கியமானதாகவும் பார்க்கின்றனர்.
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போர் பிரச்சனைக்கு மத்தியில் இந்திய முதலீட்டுச் சந்தை அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் இந்தியர்கள் தங்களது முதலீட்டின் பாதிப்பைக் குறைக்கத் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலையில் அதிகப்படியான மாற்றங்கள் பதிவான நிலையில், இன்று தங்கம் விலை தனது 18 மாத உயர்வில் இருந்து சரிந்துள்ளதால், தங்கத்தை வாங்கலாமா வேண்டாமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
தங்கம் விலை வீழ்ச்சி தான்.. ஆனால் இனி தான் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.. நிபுணர்களின் பெரும் ட்விஸ்ட்!
தங்கம் விலை
தங்கம் விலை தற்போது தீர்மானம் செய்வது ரஷ்யா – உக்ரைன் என்பதால், இதன் அடிப்படையில் தான் தங்கம் விலை தீர்மானிக்கப்படும். இதனால் ரஷ்யா – உக்ரைன் போர் நிலைப்பாடு என்ன என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க முடியும்.
ரஷ்யா – உக்ரைன் போர்
ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின்பு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகியவை ரஷ்யா மீது கடுமையான நிதியியல், வர்த்தகம், டெக்னாலஜி, பாதுகாப்பு தடைகளை விதித்த நிலையில் ரஷ்யாவை மொத்தமாக மேற்கத்திய நாடுகள் வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சந்தையில் இருந்து ஒதுக்கிவைத்துள்ளது
முதலீட்டு சந்தை
இதனால் முதலீட்டு சந்தை தற்போது ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையில் இருந்து மொத்தமாக மீண்டு வந்துள்ளது. இதன் வாயிலாகவே வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை பெரியளவிலான வளர்ச்சியைச் செய்தது.
பணவீக்கம், கச்சா எண்ணெய்
பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு சந்தை சரிவடையும் பதற்றத்தில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது பணவீக்கம் உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதன் மூலம் வரும் பாதிப்புகளைக் களைவதில் இறங்கியுள்ளது.
NATO படைகள்
ஆனால் இதேவேளையில் உக்ரைன் நாட்டிற்குள் வேகமாக நுழைந்து வரும் ரஷ்ய படை மீது NATO படைகள் தாக்குதல் நடத்தினால் கட்டாயம் போர் மிகப்பெரிய அளவில் வெடித்து மொத்த சந்தையும் தலைகீழாக மாறி தங்கம் விலை வரலாற்று உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
பேச்சுவார்த்தை
இதற்கான சாத்தியகூறுகள் குறைவாக இருந்தாலும் நிலை ரஷ்யா – உக்ரைன் – NATO நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தையில் தான் முடிவு எடுக்கப்படும். இதேபோல் NATO நாடுகள் உக்ரைன் நாட்டுக்கு நிதியுதவி செய்யத் திட்டமிட்டு இதற்கான அறிவிப்புகளையும் ஆலோசனைகளையும் செய்து வருகிறது.
முக்கியக் காரணி
இந்தச் சூழ்நிலையில் தங்கம் விலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக கச்சா எண்ணெய் விலை, அமெரிக்கப் பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டம், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் வட்டி விகித உயர்வு, பணவீக்க அளவுகள் உள்ளது.
பணவீக்கம்
தற்போது அமெரிக்கச் சந்தையில் இருக்கும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.50 சதவீதம் வட்டியை உயர்த்தினாலும் கட்டுப்படுத்த முடியாது. இது இந்தியாவுக்கும் கிட்டதட்ட பொருந்தும். ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் ரூபாய் மதிப்பில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும்.
15 நாட்கள்
இதை அடிப்படையாக வைத்தே அடுத்த 15 நாட்களில் தங்கம் விலை மாறுபடும். மேலும் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் ஏற்ற இறக்கம் முழுமையாக ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை வாயிலாக ஏற்பட்டது என்பதால் இதை வைத்து தீர்மானிக்க முடியாது.
தங்கம் விலை நிலவரம்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை வியாழக்கிழமை உயர்வில் இருந்து சுமார் 2.47 சதவீதம் சரிந்து 50,270 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 3.00 சதவீதம் சரிந்து 64,050.00 ரூபாயாக உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1920 டாலரில் இருந்து 1,889.15 டாலராகச் சரிந்து உள்ளது.
Gold price falls from 18months high between Russia – Ukraine Crisis; Is this good time to invest in gold
Gold price falls from 18months high between Russia – Ukraine Crisis; Is this good time to invest in gold 18 மாத உச்சத்தில் இருந்து தங்கம் விலை சரிவு.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் தங்கம் வாங்கலாமா..?!