5 மாநிலத் தேர்தலை முன்னிட்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், 5 மாநிலங்களில் மொத்தம் 140 கோடி ரூபாய் பணமாகவும், 100 கோடி ரூபாய்க்கு மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 570 கோடி ரூபாய் அளவிற்கு போதைப் பொருட்களும், 115 கோடி ரூபாய் மதிப்பிற்கு தங்கம் உள்ளிட்ட உலோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.