Flipkart ஷாப்பிங் தளத்திற்கு போட்டியாக Amazon India Shopping நிறுவனமும், ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விற்பனை தினங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தினங்களில் ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதல் தள்ளுபடிகள், Exchange ஆஃபர்கள் கிடைக்கிறது.
பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை, 28ஆம் தேதி உடன் முடிவடைகிறது. சலுகை நாள்களில் பயனர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதல் தள்ளுபடியும், பழைய ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல எக்ஸ்சேஞ்ச் வேல்யூவும் கிடைக்கிறது.
Flipkart Sale: வெறும் 1699 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி லேட்டஸ்ட் 5ஜி போன்!
இந்த நாள்களில் HDFC Bank கார்டுகள் மீது 10% விழுக்காடு வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும், No cost EMI வசதியும் பயனர்களுக்காக செய்து தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், நல்ல சலுகை மற்றும் தள்ளுபடியில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நார்ட் 2 5G (Oneplus Nord 2 5G Offer Price)
ஒன்பிளஸ் நார்ட் 2 5ஜி போன் ஆண்ட்ராய்டு 11ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.3 ஸ்கின் மூலம் இயங்குகிறது. இது 6.43″ முழுஅளவு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிட்டி 1200-AI சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 12 ஜிபி வரை உள்ள LPDDR4X ரேம் உள்ளது. இது 50 மெகாபிக்சல் OIS முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவை முன்பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த போன் தற்போது சலுகை விலையில் ரூ.26,999க்கு கிடைக்கிறது. எக்சேஞ்ச் சலுகைகள் மூலம் ரூ.15,000 வரை கூடுதல் தள்ளுபடிகளை பெற முடியும்.
ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு – இதில் எந்த மொபைல் சிறந்தது?
சியோமி 11 லைட் என்இ 5ஜி (Xiaomi 11 Lite NE 5G offer price)
சிறந்த ஸ்னாப்டிராகன் 778ஜி புராசஸர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 6.55″ அங்குல அமோலெட் டிஸ்ப்ளே இதில் 90HZ ரெப்ரெஷ் ரேட் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6ஜிபி LPDDR4X ரேம், 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜை மெமரியைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸ், 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகிய மூன்று கேமராக்களை பின்புறத்தில் கொண்டுள்ளது. 20 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை சலுகை நாளில் ரூ.19,999ஆக விற்கப்படுகிறது. சாதாரண நாள்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!
ஒப்போ ஏ15எஸ் (Oppo A15s Offer Price)
ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போனில் 6.52″ அங்குல எச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை உள்ளது.
மேலும், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4230mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.13,490க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தள்ளுபடிகளுடன் இதன் விலை ரூ.10,990ஆக உள்ளது.
இந்திய பொருள்களுக்கு தனிக் கடை – ‘Made in India’ தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அமேசான்!