ரஷ்யா நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எவ்வளவு மாறிவிட்டார் என்பதைப் பற்றி இன்று பேசுவோம். நேற்று, ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்த ஜெலென்ஸ்கி வந்தபோது, அவர் கோட் அணிந்திருந்தார், ஆனால் இன்று அவர் செய்தியாளர் சந்திப்புக்கு வரும்போது, அவர் சட்டையுடன் இருந்தார். இதிலிருந்து, ஜெலென்ஸ்கியின் மீது எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் மற்றும் இந்த அழுத்தம் இன்று அவரது அறிக்கையில் தெரியும். அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் முறையிட்டார், புடினுடன் பேசுவதற்கு தான் இன்னும் காத்திருப்பதாகவும், இந்த போரை இப்போதே நிறுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் கூறினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3ஆவது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், முக்கிய ராணுவ அதிகாரிகள் உடன் இணைந்து ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராகத் தலைநகரைப் பாதுகாத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் அனைவரும் இங்கே தான் இருக்கிறோம். எங்கள் ராணுவமும் இங்கே தான் உள்ளது. மக்களும் இங்கே இருக்கிறார்கள். எங்கள் நாட்டையும் எங்கள் சுதந்திரத்தையும் பாதுகாக்க நாங்கள் அனைவரும் இங்குப் போராடுகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?
சுமார் 33 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களைப் போன்ற உடை அணிந்து உள்ளார். சுமார் 33 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் அதிபர் ஜெலன்ஸ்கி ராணுவ வீரர்களைப் போன்ற உடை அணிந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனினும், உக்ரைன் சரணடையும் வரை இந்தப் போர் ஓயாது என ரஷ்ய அதிபர் புதின் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் நாடுகளை கடுமையாக எச்சரித்த புதின், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு நடுவில் வரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்யா இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், இது வரலாற்றால் நினைவுகூரப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யா மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டு இருந்தாலும் கூட உக்ரைன் மிக துணிச்சலுடன் போராடி வருகிறது. இதனிடையே இதுவரை 1000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அதேபோல பொதுமக்களில் 25 கொல்லப்பட்டதாகவும், 102 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஏற்கனவே, பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது எனபது குறிப்பிடத்தக்கத்து.
மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி