Russia Ukraine News: உக்ரைன் பெண்களை Tinder-இல் டேட்டிங்கிற்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை அன்று அதிரடியாக முன் அறிவிப்பு இன்றி போர் தொடுத்தது. இதில் 150க்கும் அதிகமான நபர்கள் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய கிவ் நகரத்தை நோக்கி ரஷ்ய ராணுவம் குண்டு மழைகளை பொழிந்து வருகிறது.

இதனிடையே, உக்ரைன் கணினிகளின் தீங்கிழைக்கும் மென்பொருள்களை நிறுவி, ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தியது. திக்குமுக்காடி போன உக்ரைன், செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய கணினிகளை உலகளாவிய ஹேக்கர்கள் குழு ஒன்று ஹேக் செய்தது. இந்த செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்முனை தாக்குதல் நடத்தும் ரஷ்யா

இந்நிலையில், உக்ரைன் இளம் பெண்களுக்கு, டேட்டிங் செயலியான Tinder மூலம் ரஷ்ய ராணுவ படைப் பிரிவினர் செய்தி அனுப்பி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பெண் ஒருவர் இந்த தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார்.

துப்பாக்கிகளை ஏந்தியவாறும், படுக்கையில் போஸ் கொடுத்தவாறும் ரஷ்ய ராணுவத்தினர் படுக்கைக்கு அழைத்து செய்திகள் அனுப்புவதாக உக்ரைன் பெண் குற்றஞ்சாட்டி உள்ளார். விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா கடுகளவும் பின்வாங்காமல், உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதலை நடத்தி வரும் வேளையில், ராணுவத்தினரின் இந்த செயல் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய கணினிகளை துவம்சம் செய்ய ஹேக்கர்கள் முடிவு; உக்ரைனுக்கு ஆதரவு!

அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையின்படி, பல ரஷ்ய
டிண்டர்
கணக்குகளில் இருந்து இளம் உக்ரேனிய பெண்களுக்கு செய்திகள் அனுப்பப்படுகின்றன என்று தெரியவந்துள்ளது. ஆண்ட்ரி, அலெக்சாண்டர், கிரிகோரி, மைக்கேல், பிளாக் என்ற பெயரில் ரஷ்ய வீரர்கள் (ரஷ்ய வீரர்கள்) துப்பாக்கிகளுடன், ராணுவ தொப்பிகளை அணிந்தவாறும், படுக்கையில் படுத்தவாறும் போஸ் கொடுத்துள்ளனர் என்றும் உக்ரேனிய பெண்களை கவரும் வகையில் சுயவிவரப் படங்களை மாற்றியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ரஷ்ய வீரர்களின் இணைய அத்துமீறல்கள்

உக்ரைனைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர், கியேவில் வசிப்பவராக இருந்தாலும், தனது இருப்பிடத்தை டிண்டரில் மாற்றி உள்ளார். அவரது நண்பர் மூலம் ரஷ்ய ராணுவத்தினரின் டிண்டர் அத்துமீறல்களை தெரிந்துகொண்ட இவர், உடனடியாக தனது இருப்பிடத்தை மாற்றியதாக தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அவர், “நான் உண்மையில் கியேவில் வசிக்கிறேன், ஆனால் டிண்டர் முழுவதும் ரஷ்ய ராணுவ வீரர்கள் இருப்பதாக ஒரு நண்பர் என்னிடம் கூறிய பிறகு எனது இருப்பிடத்தைக் கார்கிவ் என மாற்றினேன்,” என்று கூறியிருக்கிறார்.

ரஷ்யா உக்ரைன் போர்: மக்கள் பாதுகாப்புக்காக பேஸ்புக், ட்விட்டர் எடுத்த முடிவு!

தொடர்ந்து பேசிய அந்த பெண், “பெரும்பாலான கணக்குகளை நிராகரித்து விட்டேன். ஆனால் இறுதியில் ஒரு ராணுவ வீரருடன் உரையாடினேன். நான் அவரிடம் கார்கிவில் இருக்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர், “நிச்சயமாக நான் கார்கிவில் இல்லை, ஆனால் நான் அருகில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், ‘என்னை சந்திக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? என்று கேட்டேன்’. அதற்கு அவர், ‘நான் மகிழ்ச்சியுடன் வருவேன், ஆனால் ரஷ்ய தோழர்கள் 2014 முதல் உக்ரைனில் வரவேற்கப்படவில்லை என்று அவர் பதிலளித்தார்’ என்று அந்த பெண் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

ரஷ்ய படைகள் மிகவும் நெருக்கமாக இருப்பதை அறிந்து, வேடிக்கையாகவும் அதே சமயம் பயமாகவும் இருந்தது என்கிறார் அவர். இவர்களும் டிண்டரில் உள்ள பிறரைப் போலவே இருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு போரிலும் அப்பாவி குழந்தைகள், பெண்கள் இரையாக்கப்படுவது வாடிக்கையாகிப் போனது என குமுறுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். இதற்கு உலக நாடுகள் இணைந்து ஒரு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு

இதற்கிடையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனின் சில பகுதிகளில் எரிபொருள், பணம் மற்றும் மருத்துவப் பொருட்கள் குறைந்துள்ளதாக ஐ.நா உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது 5 மில்லியன் மக்களை வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வழிவகை செய்யும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கிலான உக்ரைன் கணினிகளை குறிவைக்கும் ரஷ்யா… Ukraine-இன் நிலை என்ன?

ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் குறைந்தது 1,00,000 பேர் நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பல ஆயிரம் பேர் ஏற்கனவே மால்டோவா, ருமேனியா மற்றும் போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஐநா அகதிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபியா மாண்டூ தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா எந்தப் பக்கம்?

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை கொள்கையளவில் பேணுவதற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது. ரஷ்யா – உக்ரைன் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என இந்திய அரசு நம்புகிறது.

மாஸ்கோ ஆக்கிரமிப்பு குறித்து அறிந்ததும் அதிபர் புதினை பிரதமர் நரேந்திர மோடி அழைத்து ஆலோசித்ததாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபருக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியாதாக இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெவித்துள்ளது.

போரில் சிக்கிய இந்தியர்கள்!

யுத்தம் காரணமாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிவிவகாரங்கள் துறை அமைச்சகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சுமார் 16,000 இந்தியர்கள் இன்னும் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடிமக்களில் பலர் மேற்கு வங்கத்தில் வசிக்கின்றனர். பல்வேறு நெட்டிசன்கள் மூலம் உதவிக் கோரிக்கைகளையும் பதிவிட்டுள்ளனர். அவர்களின் உதவியுடன், மம்தா பானர்ஜியின் அரசாங்கம் ஒரு இலவச ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கி உள்ளது.

ரஷ்யா Vs உக்ரைன் போரில் உங்கள் தார்மீக ஆதரவு யாருக்கு? ஏன்? கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.