உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை உக்ரைன் இராணுவம் கொடூரமாக தாக்கியுள்ளதாக வெளியாகி இருக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து எல்லையில் இந்திய மாணவர்களை உக்ரைன் போலீசார் கடுமையாக தாக்கும் அந்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
உக்ரைனில் சிக்கிய நம் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் காவல்துறையின் அட்டூழியத்தின் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.
2/ Second video#Indian students trying to leave #Ukraine at the Ukraine – Poland border are getting a beating from Ukrainian police and are not allowed to leave.pic.twitter.com/KFqIWuJ7Sy
— Indo-Pacific News – Watching the CCP-China Threat (@IndoPac_Info) February 27, 2022
இந்நிலையில், உக்ரைன் ராணுவ வீரர்கள் எங்களை தாக்கியதாக தமிழகத்தை சேர்ந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் பிரபல தமிழ் செய்தி ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் அந்த பேட்டியில்,
“நாங்கள் போலந்து நாட்டின் எல்லைக்கு புறப்பட்டு நடந்து சென்று கொண்டு இருந்தோம். சுமார் 7 கிலோமீட்டர் இருக்கும் எங்களுடைய நடைப்பயணத்தின் நடுவிலேயே எங்களை உக்ரைன் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர்.
எங்களை போலந்து எல்லைக்கு செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு நாங்கள் எங்களுடைய கல்லூரிக்கே திரும்பி செல்ல முயன்றோம். அப்போது வழிமறித்த ராணுவத்தினர் எங்களை உடல்ரீதியாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து நாங்கள் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தோம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இங்கு நிலவி வருகிறது” என்று அந்த செய்து ஊடகத்திற்கு தமிழகத்தை சேர்ந்த அந்த மருத்துவ கல்லூரி மாணவர் தெரிவித்துள்ளார்.
வெளியாகியிருக்கும் இந்த காணொளி மற்றும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் பேட்டியும் உக்ரைன் இராணுவத்தினரின் அராஜகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உக்ரைன் நாட்டுக்காக பலரும் இங்கு பரிதாபப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்திய மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியிருப்பது, உக்ரைன் நாட்டின் மீதான பரிதாப பிம்பத்தை உடைத்து, அதன் கொடூரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இனப்படுகொலை செய்து வருவதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, உண்மையைத்தான் சொல்லி இருக்குமோ என்கின்ற ஒரு விவாதமும் தற்போது தொடங்கியுள்ளது.