அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் லட்சக் கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளமும், அகவிலைப்படி உயர்வும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய செயலக சேவையை (CSS) உள்ளடக்கிய பல்வேறு
மத்திய அரசு
அமைச்சகங்களில், நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை அதிகாரிகள் வரை பணிபுரிபவர்களுக்கு, கடந்த ஆறு ஆண்டுகளாக பதவி உயர்வு பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசு அலுவலகங்களில், பிரிவு அதிகாரி, துணைச் செயலர், துணைச் செயலர், இயக்குநர் மற்றும் இணைச் செயலர்கள் தரத்தில், 6,210 அதிகாரிகள் உள்ளதாகவும், இந்த மொத்த எண்ணிக்கையில், 1,839 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த, மத்திய பணியாளர், மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணை அமைச்சர்
ஜிதேந்திர சிங்
அலுவலகம் முன்பு, பதவி உயர்வு கோரி, ஆயிரக் கணக்கான
அரசு ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போராட்டத்தில், 15,00-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். முன் அனுமதி இல்லாததால், அமைச்சர் எங்களை சந்திக்கவில்லை. இது குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பதவி உயர்வு தொடர்பான எங்களது கோரிக்கைகள், வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படும் என்றும், அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கூறினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.