தரம்சாலா: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ‘டி-20’ போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 147 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், பும்ரா, யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
அவேஷ் அசத்தல்
இலங்கை அணிக்கு இந்திய பவுலர்கள் தொல்லை தந்தனர். முகமது சிராஜ் பந்தில் தனுஷ்கா குணதிலா (0) போல்டானார். அவேஷ் கான் ‘வேகத்தில்’ பதும் நிசங்கா (1), சரித் அசலங்கா (4) வெளியேறினர். ரவி பிஷ்னாய் ‘சுழலில்’ லியனகே (9) போல்டானார். ஹர்ஷல் படேல் பந்தில் சண்டிமால் (22) அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் ஷனகா, சிராஜ், பிஷ்னா பந்தில் தலா 2 பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய இவர், அவேஷ் கான் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்தது. ஷனகா (74), கருணாரத்னே (12) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அவேஷ் கான் 2 விக்கெட் கைப்பற்றினார்.
Advertisement