ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில் “இந்த அற்புதமான கட்டுப்பாடுகள் (பொருளாதார தடைகள்) நிச்சயமாக எதையும் மாற்றாது. அமெரிக்காவுக்கு இது தெளிவாக தெரியும். அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையப்படும் வரை போர் நடவடிக்கை தொடரும்” என ரஷ்ய தேசிய பாதுகாப்பு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது.
இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்…
உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்துங்கள்! ரஷ்ய படைகளுக்கு உத்தரவு
மாறு வேடத்தில் நுழைந்த ரஷ்ய இராணுவ வீரர்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன் இராணுவம்
உக்ரைன், ரஷ்யாவில் விளம்பரங்கள் ரத்து! டுவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
ரஷ்ய – உக்ரைன் போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் பிறந்த குழந்தை