இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்வதற்கு முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் பந்துவீச்சு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சிறிது நிதானமாக ஆடிய விக்கெட் கீப்பர் தினேஷ் சந்திமால் 25 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆடிய இலங்கை அணியின் கேப்டன் அரை சதம் அடித்து அசத்தினார்.
38 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரி உட்பட 74 ரன்களை எடுத்து தசுன் ஷனக அசத்தினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை, இழந்து 148 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 73 ரன்களை சேர்த்து அசத்தினார்.
That’s that from the final T20I.#TeamIndia win by 6 wickets to complete a clean sweep 3-0 against Sri Lanka.
Scorecard – https://t.co/gD2UmwjsDF #INDvSL @Paytm pic.twitter.com/er1AQY6FmL
— BCCI (@BCCI) February 27, 2022
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இலங்கையை இந்த டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்துள்ளது.
மேன் ஆஃப் தி சீரியஸ் -ஸ்ரேயாஸ் ஐயர்
Man of the Match ✅
Man of the Series ✅How good was @ShreyasIyer15 in this series 👏👏@Paytm #INDvSL pic.twitter.com/654OhvNlTa
— BCCI (@BCCI) February 27, 2022