இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான க்வைஷ் தாபா உக்ரைனின் கார்கிவ் நகரில் தங்கியிருந்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மாணவியின் கல்விக் கனவையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றியது.
யுத்தகளத்தில் இருந்த மாணவியின் அனுபவம் இது. பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக மொபைல் போன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அதற்கு முன்னதாக, கார்கிவ் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தாபா, ஒரே இரவில் தனது வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பது குறித்து ஜீ மீடியாவிடம் பேசினார்.
“பிப்ரவரி 23 அன்று, இந்தியாவுக்குத் திரும்ப விமானத்தில் ஏறுவதற்காக எனது நண்பரை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டேன். நான் மீண்டும் என் குடியிருப்பிற்கு வந்தேன். அதுவரை அது மற்ற நாட்களைப் போலவே இருந்தது என்று தாபா சொல்கிறார்.
மேலும் படிக்க | ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அரசியல் ஆதரவை கோரும் உக்ரைன் அதிபர்
பிப்ரவரி 25 அன்று தாபா விமானத்தில் வீடு திரும்பவிருந்த நிலையில், தற்போது மாணவி க்வைஷ் தாபா, 500 மாணவர்களுடன் ஒரு பதுங்குக்குழியில் தங்கியுள்ளார். போர் தொடங்கும் வரை, நிலைமை யுத்தமாக மாறும் என்று அங்கு இருந்த இந்திய மாணவர்கள் யாருமே நினைக்கவில்லை.
“காலை 5 மணிக்கு, இந்தியாவில் இருந்து எனக்குச் செய்தி தெரிவிக்க என் தந்தைதான் அழைத்தார். அப்போதுதான் நான் ஜன்னலிலிருந்து எட்டிப்பார்த்தேன். குண்டுவீச்சு சத்தங்களைக் கேட்கத் தொடங்கின. நான் இருந்த நகரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை எனது நண்பர்கள் வீடியோக்களை அனுப்பினார்கள்” என்று மாணவி தாபா கூறினார்.
பாதுகாப்பான இடத்தைத் தேடுமாறு உள்ளூர் அதிகாரிகள் மாணவர்களை எச்சரித்தார். இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி நண்பர்களுடன் தனது பல்கலைக்கழக விடுதிக்குச் செல்லத் தேர்வு செய்தார். இந்தப் பட்டப்படிப்பு படித்துவரும் க்வைஷ் தாபா, ஒகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்த பிறகு, கல்லூரியின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டிருந்த பதுங்குக்குழிக்கு செல்வதற்கான வாகனம் வந்தது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | பேஸ்புக்கிற்கான அணுகலை மட்டுப்படுத்தும் ரஷ்யா! காரணம் இதுதான்
பதுங்கு குழிக்குச் செல்வதற்கு முன், நாங்கள் உணவு மற்றும் தண்ணீரை எங்களுடன் எடுத்துச் செல்ல முயற்சித்தோம், ஆனால் வெளியே உள்ள அனைத்து தண்ணீர் தொட்டிகளும் வறண்டு போயிருந்தன. மளிகைக் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் இருந்தன, குளுக்கோஸ், பழங்கள், சாக்லேட்கள், செதில்கள் மற்றும் ரெடிமேட் சப்பாத்திகள் என தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். கல்லூரியில் அடித்தளத்தில் உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் மெட்ரோ நிலையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களுக்கு போதிய பொருட்கள் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
யுத்தக்களத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் பயங்கரமான சூழ்நிலையிலும், தாபா தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். “அனைவரும் சூழ்நிலையைச் சமாளிக்க ஒருவருக்கொருவர் உதவுகிறோம்.” என்று உறுதியுடன் தெரிவித்தர்.
ஆனால் கார்கிவ் நகரம் கிழக்கு உக்ரைனில், ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ளது, இது விஷயங்களை சிக்கலாக்கும்.
மேலும் படிக்க | உக்ரைனின் உதிரம் சிந்தும் போர்க்களத்தில் உதித்த குழந்தைப்பூ
தற்போது உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அந்நாட்டின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் என்று அவர் கூறினார். “நாங்கள் போலந்து, ஹங்கேரி அல்லது ருமேனியாவின் எல்லைச் சோதனைச் சாவடியை அடைய சுமார் 17 மணிநேரம் ஆகும், இந்த நேரத்தில் அவ்வளவு தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பான வழி அல்ல. குடிமக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டாலும், அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவீசித் தாக்கப்படும் வீடியோக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
“எனது பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள், நான் அவர்களிடம் பேசி நம்பிக்கைக் கொடுக்கிறேன். அதனால் அவர்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்று மாணவி கூறுகிறார்.
நாட்டில் நிகழ்வுகள் மோசமடைவதற்கு முன்பு நீங்கள் எப்போதாவது பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தீர்களா என்று கேட்டதற்கு, மருத்துவ மாணவியின் பதில் என்ன தெரியுமா?
“உக்ரைன் ஒரு அழகான மற்றும் அமைதியான நாடு. இது எனது சொந்த ஊரைப் போலவே உணரச் செய்கிறது”.
இந்திய பொருட்களை விற்கும் ஏராளமான கடைகள் இருப்பதாகவும், கார்கிவ் வாழ்வதற்கு வசதியான இடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்?
பாதுகாப்பு பற்றி பேசுகையில், தொற்றுநோய் காலம் கூட அமைதியாக சென்றது, ஆனால் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய மூன்று நாட்களில் நடக்குக்ம் விஷயங்களை ஒருபோதும் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை என்று இந்திய மாணவி கூறுகிறார்.
ரஷ்ய துருப்புக்கள் கனரக பீரங்கிகளுடன் நாட்டைச் சுற்றி நகர்ந்தன, படையெடுப்பின் முதல் நாளில், அன்டோனோவ் விமானத் தளத்தையும் செர்னோபிலையும் கைப்பற்றினர். இப்போது, அவர்கள் கார்கிவ் என்ற இடத்தில் இயற்கை எரிவாயு குழாயை தகர்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வெளியில் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்திய மாணவி, தனது நண்பர்கள் மற்றும் சக மாணவர்களுடன் விரைவில் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று நம்புகிறார்.
மேலும் படிக்க | விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி