புதுடில்லி-உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தி வருவது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, உக்ரைன் – ரஷ்யா இடையில் பேச்சு நடத்தப்பட வேண்டும் என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, போர் நடக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணிகளில் மத்திய அரசு முழுவீச்சில் இறங்கி உள்ளது.இந்நிலையில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவை குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று இரவு டில்லியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வரும் முயற்சிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்களா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement