உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை சுமார் 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகின.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 12 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை 53 புள்ளி 98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
692 வேட்பாளர்கள் போட்டியிடும் 5ஆம் கட்டத் தேர்தலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, சிராது தொகுதியில் அப்னா தள வேட்பாளர் பல்லவி படேலை எதிர்த்து களம் கண்டார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. பொதுவாக அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக வரிசையில் நின்று வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM