லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 692 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். உபி.யில் மொத்தமுன்ள 403 தொகுதிகளில், இன்று 5வது கட்டமாக ரேத்தல் நடைபெறும் 61 தொகுதிகளையும் சேர்த்து இதுவரை 292 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மார்ச் 3ம் தேதி, 7ம் தேதி முறையே 6, 7ம் கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது.