லக்னோ: உ.பி., சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு 61 தொகுதிகளில் இன்று (பிப்.,27) காலை 7 மணிக்கு துவங்கியது.. 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
403 தொகுதிகளை கொண்ட உ.பி., யில் சட்டசபை ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பிப்ரவரி 10, 14, 20, 23 ஆகிய தேதிகளில் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 27ஆம் தேதி 5வது கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது.
உ.பி., மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற சமாஜ்வாதி கட்சி கடுமை யாக போராடி வருகிறது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜவும் போராடி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒவைசி கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
5வது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அயோத்தி தொகுதியை கைப்பற்றுவதில் பா.ஜ., மற்றும் சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Advertisement