தனுஷை பிரிந்த பிறகு வேலையில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா
ரஜினிகாந்த்
. முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார்.
முசாபிரை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இரண்டு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு வீடியோக்களிலுமே தன் பெயருக்கு பின்னால் அப்பா ரஜினிகாந்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அண்ணாவுடன் சேர்ந்துவிடுங்கள் அண்ணி. அடுத்த வீடியோவில் ஐஸ்வர்யா
தனுஷ்
என்கிற பெயரை தான் எதிர்பார்க்கிறோம் என தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுமாறு ரஜினிகாந்த் தொடர்ந்து கூறி வருகிறாராம். அவரின் பேச்சை கேட்டுத் தான் தனுஷும், ஐஸ்வர்யாவும் மனம் மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் சேர்வது குறித்த அப்டேட்டை தான் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
Dhanush:கமலுக்கு ஒரு அம்ரிதா, தனுஷுக்கு காவ்யா: சூப்பர் பெண்மணிகள்
கெரியரை பொறுத்தவரை வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. அந்த படத்தில் தனக்கு ஸ்டைலிஸ்ட்டான காவ்யா ஸ்ரீராமுடன் சாப்பிட உணவகத்திற்கு சென்றார் தனுஷ்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.