என் 'மார்க்கெட்' உயர்கிறது : நடிகர் ஜெய்

'சுப்பிரமணியபுரம்' படத்தில் லோக்கல் காதல் மன்னனாக வந்து 'கண்கள் இரண்டால்' என பாட்டு பாடி அசத்தி, சாக்லேட் பாயாக காதல் காட்சிகளில் கலக்கி… நடிப்பு மட்டுமல்ல இசையும் நான் தான்… என இசையமைப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகர் ஜெய்
மனம் திறக்கிறார்…

* உங்க நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் பற்றி
சுசீந்திரன் இயக்கத்தில் 'குற்றம் குற்றமே', வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', கோபி நயினார் இயக்கத்தில் 'கருப்பன் நகரம்', பத்ரி இயக்கத்தில் 'பட்டாம்பூச்சி' சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம், சசிகுமாருடன் நடிக்கும் ஒரு படம் என 10 படங்கள் வெளிவருகிறது.

* உங்க மார்க்கெட் நிலவரம்
'பகவதி', 'சென்னை 28', 'சுப்ரமணியபுரம்'… மார்க்கெட் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. என் சம்பளம் தாண்டி கதை, தயாரிப்பாளர்களுக்கு ஏற்ப சம்பளம் வாங்குகிறேன். வெற்றிக்காக போராடும் நிலையில் சம்பளத்தை விட கதைகள் தான் முக்கியம்.

* ஒரு நடிகரா 'ஜெய்'யை மக்களிடம் சேர்த்த படங்கள்
'பகவதி', 'அவள் பெயர் தமிழரசி', 'சென்னை-28', 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. 'கலகலப்பு 2', போல் சில வெற்றி படங்களும் லிஸ்ட்டில் உள்ளன.

* ரொம்ப நாளா பிரஸ் மீட்டுக்கு வராத நீங்க, சமீபத்துல வந்தீங்க. ஏன் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் நீங்கள் என்பதாலா?
முன்னாடியெல்லாம் வருஷத்துக்கு 4 படங்கள் பண்ணிட்டு இருந்தேன். ஒரு படம் சூட்டிங் முடிச்சு இசைவெளியிட்டின் போது, இன்னொரு படம் சூட்டிங்கில் இருந்தேன். அதுவும் ஒரு காரணம். இரண்டாவது நம்ம நடிச்ச படத்தை பத்தி என்ன பெருமையா பேசிட்டே இருக்கிறது. இயக்குனர் பேசினாலோ, அந்த படத்தின் இசையமைப்பாளர் பேசினாலோ சரியா இருக்கும்னு நினைச்சேன். நம்ம பண்ற படம் நல்லா இருக்குமா நல்லா இருக்காதா என்று தெரியாது. இதை எப்படி மக்கள் கிட்ட நல்லா இருக்குன்னு சொல்லி அவங்க கிட்ட நம்பிக்கையைக் கொடுக்கிறதுனு எனக்கு தெரியல. மக்களை ஏமாத்த எனக்கு பிடிக்கல. எல்லா படத்தோட இசை வெளியீட்டிற்கும், அந்த படத்தின் இசையமைப்பாளர் வருவாங்க ஆனா வீரபாண்டிய புரம் படத்துக்கு நானே நடித்து நானே இசையமைத்தேன், அதனால் கண்டிப்பா நான் வந்தே ஆகணும், அங்க என் இசை பத்தி மட்டும் பேசினேன். இனி முடிந்த வரை என் பட விழாக்களுக்கு வருவேன்

* நீங்கள் நடித்த வீரபாண்டியபுரம் படத்திற்கு இசையும்..
ஆமா… 'வீரபாண்டியபுரம்' படத்தில் நானே நடித்து இசையமைத்துள்ளேன். ஆனால் படத்துக்காக உடல் எடை குறைத்தது சண்டை காட்சிகளில் நடிக்கும் போது ஏற்பட்ட சம்பவங்கள் இரண்டு கெட்டப்களில் மாறி நடிச்சிருக்கேன். அதனால் தான் ரொம்ப நாளைக்கு பின்னாடி இசை வெளியீட்டு விழாவிற்கு வந்தேன்.

* இசை படித்து நீங்கள் இசை அமைப்பாளராக…
இசை படிக்கும் போது 'பகவதி' வாய்ப்பு வந்ததால் தொடர்ந்து படிக்கவில்லை. 'டிரிபிள்ஸ்' இயக்குனர் தான் ஒரு பாட்டு கேட்டு வாங்கினார். அதற்கு பின் தான் இசை அமைக்க முடியும் என நம்பிக்கை வந்தது. இனி கதை பிடித்தால் படங்களுக்கு இசையமைப்பேன்.

* உங்களுடன் நடித்த நடிகைகளில் திறமைசாலிகள் யார்
'வாமனன்' படத்தில் பிரியா ஆனந்த், 'சென்னை 28' விஜயலட்சுமி, 'சுப்பிரமணியபுரம்' சுவாதி, 'திருமணம் என்னும் நிக்கா' நஸ்ரியா திறமைசாலிகள். நயன்தாராவுடன் கிரியேட்டிவாக நடிக்க கற்றேன். 'எங்கேயும் எப்போதும்'ல் ஒரு பாய் பிரண்டு கிட்ட இயல்பாக பழகி நடித்த அஞ்சலியும் திறமைசாலி தான்.

* உங்க பிளஸ், மைனஸ் என்ன?
என்னோட ப்ளஸ் என நினைக்கிறது எதார்த்தம். அதை மட்டும் என்ன விட்டு போயிட கூடாதுனு வேண்டுகிறேன். என்னை நம்பி எந்த வேலை கொடுத்தாலும் ரொம்ப ஆர்வத்தோடு செய்வேன். இசை, நடிப்பு என்று எந்த வேலையாக இருந்தாலும் அதை இன்னும் எப்படி சிறப்பாக செய்ய முடியும் என்று ரொம்ப கவனத்தோடு செய்வேன். மைனஸ்னு குறிப்பிட் டு சொல்றது, இப்ப இருக்கும் ஜெனரேசனுக்கு நாம் பண்ணும் படங்களை எடுத்து போகும் பிரமோஷன் ரொம்ப முக்கியம். இதுக்கெல்லாம் நான் அடாப்ட் ஆகமா இருக்கேன். இது என் மைனஸ்.

* ஜெய், பிரேம்ஜி, சிம்பு, விஷால் எல்லாரும் முரட்டு சிங்கள் ஆவே இருக்க பிடிக்குமோ?
பிரேம்ஜிக்கு ககல்யாணத்துல ஆசை இல்ல. விஷால் டயலமோல இருக்கார். சிம்புவுக்கு நான் வேண்டுகிறேன் அடுத்த வருஷத்துக்குள்ள கல்யாணம் ஆகனும்னு. என் கதை தெரியல 90களில் இதை கேட்டுருந்தா ஏதாச்சும் சொல்லி இருப்பேன். இப்ப எந்த பக்கம் திரும்பினாலும் டைவர்ஸ்னு ஆகுது. என்னதான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணாலும் பிரிஞ்சி போய்றாங்க.. பெரியவங்க பார்த்து வச்சி கல்யாணம் பண்ணினாலும் பிரிஞ்சுடுராங்க.. முதலில் 90% சண்டை போட்டாலும் ஒன்றாக இருப்பார்கள், 10 சதவீதம்தான் டைவர்ஸ் ஆகும். இப்போ தலைகீழாக உள்ளது. என்ன தப்பு பண்ணாலும் என்னை புரிந்து கொண்டு கடைசி வரை என் கூட தான் இருப்பேன் என்று என்னை நம்பி வாழும் ஒரு பெண் கிடைத்தால் கண்டிப்பா திருமணம் செய்து கொள்வேன்.

* நீங்கள் இல்லாம 'மாநாடு' வச்சுட்டாரு வெங்கட்பிரபு
'மாநாடு' படப்பிடிப்பின் போது 'எண்ணித் துணிக' படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். அதனால் 'மாநாடு'ல் நடிக்க முடியல. எஸ்.ஜெ., சூர்யா கேரக்டர் கிடைத்திருந்தால் நல்லா நடிச்சிருப்பேன். .

* வில்லன் ரோல் ஆர்வம் வந்தது
நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆசை. சுந்தர் சி தயாரிப்பில் 'பட்டாம் பூச்சி'ல் நெகட்டிவ் ரோல் நடிச்சிருக்கேன். 2 ஆண்டு பயிற்சிக்கு பின் கார் ரேஸ் போனேன். இப்போ டாப் 6 வந்திருக்கேன். 2021ல் இருந்து ரேஸ் போயிட்டு இருக்கேன். இந்திய அளவில் ரேஸ்ல பங்கேற்பது என் கனவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.