கீவ்,-உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆசிரியையின் படம், ‘போர் முகம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது. ராணுவ தளங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கார்கிவ் நகரின் சுகுவேவ் என்ற இடத்தில் வசிக்கும் ஆசிரியை ஒலேனா குரிலே, 52, என்பவர் வீட்டின் மீதும் ஏவுகணை விழுந்தது.
இதில் அவரது வீடு முற்றிலும் நாசம் அடைந்தது. ஆனால், குரிலே பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். முகம் முழுதும் கண்ணாடி துகள்களுடன் தப்பிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகத்தில் ரத்தக் காயத்துடன் கட்டுப்போட்ட குரிலேவின் படம் சமூக வலைதளங்களில், ‘போர் முகம்’ என்ற பெயரில் வேகமாக பரவி வருகிறது.
கீவ்,-உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆசிரியையின் படம், ‘போர் முகம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.