ஒரே வாரத்தில் ரூ.3.3 லட்சம் கோடி காலி.. RIL, டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு..முதலீட்டாளர்கள் கண்ணீர்!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 3,33,307.62 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இது கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு இழப்பினை கண்டுள்ளது.

இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மதிப்பு இழப்பிலும் முதலிடத்தில் உள்ளது.

இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் பெரும் சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!

 டாப் 10  நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்கள்

இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் மட்டும் தனியாக 94,828.02 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 15,45,044.14 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.25% அதிகரித்து, 2,283.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டிசிஎஸ்
 

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 1,01,760.91 கோடி ரூபாய் குறைந்து, 13,01,955.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 3.50% அதிகரித்து, 3520.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

இதே ஹெச்.டி.எஃப்.சி-வங்கியின் சந்தை மூலதனம் 31,597.65 கோடி ரூபாய் குறைந்து, 8,06,597.65 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.59% அதிகரித்து, 1456.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 5,501.34 கோடி ரூபாய் குறைந்து, 7,12,443.09 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 0.98% அதிகரித்து,1694.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி வங்கியின் சந்தை மதிப்பானது 13,240.66 கோடி ரூபாய் குறைந்து, 5,07,414.1 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 3.20% அதிகரித்து, 730.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 33,23497 கோடி ரூபாய் குறைந்து, 5,09,99053 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 2170.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 29,094.23 கோடி ரூபாய் குறைந்து, 4,20,653.95 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.18% அதிகரித்து, 482.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ்

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 3802.65 கோடி ரூபாய் குறைந்து, 4,20,653.95 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 5.15% அதிகரித்து, 6969.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 13,318.16 கோடி ரூபாய் குறைந்து,3,78,098.62 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.65% அதிகரித்து, 688.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 10 firms lose over Rs.3.3 lakh crore crore in market capitalization, RIL top loser

Top 10 firms lose over Rs.3.3 lakh crore crore in market capitalization, RIL top loser/ஒரே வாரத்தில் ரூ.3.3 லட்சம் கோடி காலி.. RIL, டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு..முதலீட்டாளர்கள் கண்ணீர்!

Story first published: Sunday, February 27, 2022, 20:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.