உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு விடுத்தும் மறுத்து வந்த உக்ரைன், பிறகு பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, ரஷியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வருகிறது. ரஷிய விமானங்கள் வான்வெளியில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. பெல்ஜியம், டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை விதித்தது.
இந்நிலையில், கனடாவும் தங்கள் நாட்டின் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்..
சாகும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வேன்- பிரதமர் மோடி உருக்கம்