கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக சரிவு: கேரளாவில் தொடர்ந்து அதிக பலி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் வீசிய கொரோனா 3வது அலையின்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டியது. தற்போது, இந்த எண்ணிக்கை நாள்தோறும் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10 ஆயிரத்து 273 பேர் புதிதாக பாதித்துள்ளனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 16 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.* அதேபோல், புதிதாக 243 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.* வழக்கம் போல் நேற்றும் தினசரி பலி எண்ணிக்கையில் கேரளா முதலிடம் வகிக்கிறது. இங்கு புதிதாக 181 பேர் இறந்துள்ளனர். அடுத்தப்படியாக, 19 பலியுடன் கர்நாடகா 2ம் இடத்தில் உள்ளது.* குணமடைவோர் எண்ணிக்கை 98.54 சதவீதமாக அதிகரித்துள்ளது.* நாடு முழுவதும் நேற்று வரையில் 177.44 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.