உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி ரஷ்யா தாக்கி வரும் நிலையில் எண்ணெய் கிடங்குகள், எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டு பல இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
The footage shows a gas pipeline on fire in Kharkiv after a Russian attack.
Video: State Special Communications Service of Ukraine pic.twitter.com/owuSoKqoFA
— The Kyiv Independent (@KyivIndependent) February 27, 2022
அதேபோல் உக்ரைன் ராணுவமும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனின் எரிவாயு,எண்ணெய் கிடங்கு ஆகியவற்றின் உள்கட்டமைப்புகளை நிர்மூலமாக்குவதில் ரஷ்யா முனைப்பு காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்கீயவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் எரிவாயு குழாய்கள் தகர்க்கப்பட்டு தீ கொழுந்து விட்டு எரிவதாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன
இதனை உக்ரைன் ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.