கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் உருவாகலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் வைரஸ் தொற்று தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சராசரியாக ஆயிரத்தை விடவும் அதிகம் என்பதுடன் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு ஏற்ற இறக்கங்களை பதிவு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகளுடன் கோவிட் தொற்று திரிபுகள் முடிந்துவிடும் என நினைப்பது கூட பயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதார பிரிவினரும், பொதுமக்களும் கோவிட் தீர்ந்து விட்டதாக நம்பிக்கை கொண்டாலும், புதிய திரிபுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு புதிய திரிபுகள் உருவாகினால் அதனை எதிர்கொள்வதற்கு போதியளவு முன் ஆயத்தங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.