சமூகநலத்துறை அதிகாரிகளை மிரட்டி லஞ்சம் – இணை இயக்குநர் மீது வழக்கு

சமூக நலத்துறை அதிகாரிகளையே மிரட்டி லஞ்ச பெற்றதாக அத்துறையின் இணை இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சமூகநலத்துறையில் மதிய உணவுத் திட்டத்தின் இணை இயக்குநராக இருப்பவர் ரேவதி. இவர் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்சப் புகாரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சேலம் மற்றும் நெல்லை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளை மிரட்டி தலா 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக கண்டுபிடித்துள்ளனர்.
image
மேலும் லஞ்சப் பணத்தை நேரடியாக பெற்றால் தனக்கு சிக்கல் என்பதால், அதை பெற்றுக் கொள்ள 6 முகவர்களை நியமித்து, அவர்களது வங்கி கணக்குகள் மூலமாக பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதைத் தொட்ந்து இணை இயக்குநர் ரேவதி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த 6 முகவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.