தஞ்சாவூரில் உள்ள சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்த்ரா) நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அகற்றுமாறு பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் பிப்ரவரி 25 அன்று நோட்டீஸ் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோட்டீஸானது, திருமலைசமுத்திரம் கிராமத்தில் நிலங்களை ஒதுக்கீடு, அந்நியப்படுத்துதல் அல்லது பரிமாற்றம் செய்வதற்கான சாஸ்த்ராவின் மனுவை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்து வந்தது.
மாவட்ட வருவாய்த் துறை 1985 இல் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி, அங்கிருந்து வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இவ்விவாகரத்தில் SASTRA அதிகாரிகள் சட்டப்போராடத்தை கையில் எடுத்தனர். நீண்ட நாள்களாக இழுத்துவந்த போராட்டமானது, 2018இல் முடிவுக்கு வந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்து, சாஸ்த்ரா வெளியேறும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பல சிக்கல்களுக்கு மத்தியில் சாஸ்த்ராவுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிராக அரசு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை, தஞ்சாவூர் வருவாய்த்துறை அதிகாரிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, அதன் வாயில்களில் வெளியேற்ற அறிவிப்பை ஒட்டினர்
நோட்டீஸின் படி, 31 ஏக்கர் நிலம் சாஸ்ட்ராவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24 அல்லது அதற்கு முன் பல்கலைக்கழக வளாகத்தை காலி செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வெளியேற தவறினால், நிலம் தஞ்சாவூர் தாசில்தாரால் கையகப்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தஞ்சாவூர் வருவாய்த் துறை 30 ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்திற்கு முதல் நோட்டீஸை அனுப்பியது. ஆனால், அந்நிறுவனம் சட்டப்போராட்டம் மூலம் இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்து வந்துள்ளது.
2018ல், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறுகையில், “எந்தக் கோணத்தில் பார்த்தாலும், பொதுச் சேவை செய்வதாகக் கூறும் அவர்கள் பொது அவதூறுகளை செய்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பைசா செலுத்தாமல் 20.62 ஏக்கர் நிலத்தை அனுபவித்துள்ளனர் என்றார்.
மேலும், சாஸ்த்ராவுக்கு வெளியேற்ற நோட்டீஸ் அனுப்ப அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் வளாகத்தை காலி செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார்.