நடிகர்
தனுஷ்
மற்றும்
சிம்பு
இருவரும் ஆரம்பகாலத்தில் இருந்தே போட்டி நடிகர்களாகவே பார்க்கப்பட்டு வந்தனர். சமகாலத்தில் சினிமாவில் நாயகர்களாக அறிமுகமான இவர்கள் போட்டிபோட்டு தங்கள் படங்களை வெளியிட்டு வந்தனர்.
இவர் ஒரு காதல் படத்தில் நடித்தார் அவரும் அதேபோன்று ஒரு காதல் படத்தில் நடிப்பார். கமர்ஷியல் படத்தில் ஒருவர் நடித்தால் மற்றவரும் கமர்ஷியல் படத்தில் நடிப்பார். இவர் பாட்டு பாடினால் அவரும் பாடுவார். இதேபோல் இவர்களின் போட்டி சென்று கொண்டிருந்தது.
ரஜினி அமைக்கப்போகும் வெறித்தனமான கூட்டணி…வெளியான சூப்பர் தகவல்..!
எப்படி ரஜினி மற்றும் கமல், விஜய் மற்றும் அஜித் பார்க்கப்பட்டார்களோ தனுஷ் மற்றும் சிம்புவும் அதேபோல் தான் பார்க்கப்பட்டனர். ஆனால் இடையில் சிம்பு சில சறுக்கல்களை சந்தித்து பின்தங்கிய நிலையில் தனுஷ் மளமளவென வளர்ந்துவிட்டார். பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று அசதிவருகிறார் தனுஷ்.
தனுஷ்
இருப்பினும் தற்போது
மாநாடு
படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார் சிம்பு. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய
பிக் பாஸ்
அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இதுமட்டுமில்லாமல் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
தனுஷ்
இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள
மாறன்
படத்தின் ட்ரைலரை சிம்பு வெளியிடப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே இதைக்கேட்ட ரசிகர்கள் சிம்புவும் தனுஷும் போட்டியை மறந்து நண்பர்களாக மாறிவிட்டதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாறன் படத்தை வாங்கியுள்ள
ஹாட்ஸ்டார்
நிறுவனம் தான் சிம்புவை இப்படத்தின் ட்ரைலரை வெளியிடும்படி கேட்டுக்கொண்டுள்ளது என்று ஒரு தகவல் வந்துள்ளது. ஏனென்றால் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்குகிறார்.
எனவே தங்கள் நிறுவனம் வாங்கியுள்ள படத்தின் ட்ரைலரை சிம்பு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கருதினார்களாம். இதற்கு சிம்புவும் சம்மதித்திருப்பதால் அவர் மாறன் படத்தின் ட்ரைலரை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து தல Glimpse ஏன் இப்படி இருக்கு! படத்தில் நயன்தாரா வேடம்!