மத்தியப் பிரதேசத்தில் செங்கல் சூளை நடத்துபவர் கண்டெடுத்த 26.11 காரட் மதிப்புடைய வைரம் ரூ.1.62 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் சுஷில் சுக்லா. இவருக்கு கடந்த பிப்ரவரி 21 அன்று 26.11 காரட் வைரங்கள் கிடைத்தது. அவை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஒரு காரட்டின் மதிப்பு ரூ.3 லட்சத்தில் தொடங்கி ரூ.6.2 லட்சம் வரை சென்றது. இறுதியாக உள்ளூர் வியாபாரி ஒருவர் ரூ.1.62 கோடிக்கு ஏலம் எடுத்தார். இதில் அரசுக்கான உரிமைத் தொகை, வரி போக மீதி சுமார் ஒரு கோடி ரூபாய் சுஷில் சுக்லாவுக்கு சேரும் எனக் கூறப்படுகிறது.
தலைநகர் போபாலில் இருந்து 380 கி.மீ தொலைவில் உள்ள பன்னா மாவட்டத்தில் 12 லட்சம் காரட் மதிப்பிலான வைரங்கள் மண்ணில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாட்டுக்கு தேவை துரித நடவடிக்கை; பிரதமர் செய்வதோ…! – ராகுல் காந்தி சாடல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM