எடியூரப்பாவுக்கு வயது 79
பெங்களூரு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பிறந்த தினம். 79 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதை ஒட்டி, பெங்களூரு குமாரகிருபா சாலையில் காவிரி இல்லத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள் வழங்குகிறார். கொரோனாவால் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுுவதில்லை என்றும், யாரும் பூங்கொத்து, சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.
115 பேருக்கு வேலை
பெங்களூரு: கர்நாடக திறமை அபிவிருத்தி வாரியம் சார்பில், மல்லேஸ்வரத்தில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. 44 நிறுவனங்கள் பங்கேற்றன. 1,085 பேர் வேலைக்கு விண்ணப்பித்தனர். 115 பேருக்கு ஒரே நாளில் வேலை உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு அமைச்சர் அஸ்வத் நாராயணா, வேலை உறுதி பத்திரம் வழங்கினார்
.ரூ.500 கோடி நிவாரணம்
வேணும்பெங்களூரு: முதல்வர் பசவராஜ் பொம்மை, பல்வேறு தொழிற்சங்கங்களுடன் பட்ஜெட் தயாரிப்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கொேரானாவால் நலிவடைந்துள்ள தங்களுக்கு 500 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கும்படி, பீன்யா தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.பொதுக்கூட்ட ஏற்பாடு பார்வைபெங்களூரு: மேகதாதில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரசார் ராம்நகரில் இன்று பாதயாத்திரை ஆரம்பிக்கின்றனர். மார்ச் 3 ல் பெங்களூரு பசவனகுடி நேஷனல் கல்லுாரியை வந்தடைகின்றனர்.
அன்றைய தினம் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை மாநில காங்., தலைவர் சிவகுமார் நேற்று பார்வையிட்டார்.கலபுரகிக்குள் நுழைய தடைகலபுரகி: மஹாசிவராத்திரியை ஒட்டி நடக்கவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதற்காக, ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக், ஹிந்து அமைப்பு பிரமுகர் சைத்ரா, கருணேஷ்வர மடத்தின் மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் ஆகியோர் கலபுரகி வர திட்டமிட்டுள்ளனர். ஆனால், இன்று முதல் மார்ச் 3 வரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலபுரகி மாவட்ட கலெக்டர் யஷ்வந்த் குருகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.நாளை முதல் ஹால் டிக்கெட்பெங்களூரு: அரசு முதல் நிலை கல்லுாரிகளில் காலியாக உள்ள 1,242 உதவி பேராசியர்களுக்கான தேர்வு மார்ச் 12 முதல், 16 வரை மாநிலம் முழுதும் நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல் http://kea.kar.nic.in என்ற இணையதளம் வாயிலாக நுழைவு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கர்நாடக தேர்வாணைய செயல் நிர்வாக இயக்குனர் ரம்யா தெரிவித்தார்.மகளிர் கண்டன ஊர்வலம்பெங்களூரு: மகளிர் உரிமை பறிக்கப்படுவதாக கூறி, பாலியல் சிறுபான்மையினர் நகரின் மெஜஸ்டிக்கிலிருந்து சுதந்திர பூங்கா வரை நேற்று ஊர்வலமாக வந்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி, தங்களது உரிமை காக்க அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
Advertisement