தனுஷின் மாறன் டிரைலரை வெளியிடும் ரசிகர்கள்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாறன் ' படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சமுத்திரகனி, அமீர் ,ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார் .இந்த படம் அடுத்த மாதம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.