“சமூக நீதிப் பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் திமுக பயணிக்க வேண்டியிருப்பதாக தமிழக முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘உங்களில் ஒருவன்’ என்ற சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு மற்றும் மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியை காக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்த தலைவனாகவும், மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற முதலமைச்சராகவும் 68 ஆண்டுகளைக் கடந்து எனது வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனது பிறந்தநாளன்று திமுகவினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் ஏதுமின்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், அறிவுக்கு வித்தாகும் புத்தகங்களையும் வழங்க வேண்டும். சமூக நீதி பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து திமுக பயணிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
