உக்ரைன்
மீதான ரஷ்யாவின் போர் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.
ரஷ்யப் படைகள்
இன்று அதிகாலை உக்ரைன் தலைநகரை நோக்கி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நகரத் தொடங்கியதாகவும் வாசில்கிவ்வில் உள்ள கியிவ் நகருக்கு தெற்கே இரண்டு பெரிய ஏவுகணைகள் வெடித்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவ் பகுதியில் ஏற்கனவே ரஷ்ய படைகள் ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டன. இவ்வாறு ஆயுதங்களுடன் வலம் வரும் ரஷ்ய வீரர்கள் கார்கிவ் நகருக்குள் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பொருட்களை அள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ரஷ்ய குண்டுகளால் உக்ரைன் மக்கள் பிழைப்பை இழந்து தவிக்கும் நிலையில் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் ரஷ்ய வீரர்களின் செயல் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தியுள்ளது. இது இப்படியே நீண்டால் உக்ரைன் மக்களின் வீடுகளுக்குள் ரஷ்ய படைகள் செல்வதிலும் ஆச்சரியமில்லை.
திருடனின் பேச்சும், இன்ஸ்பெக்டர் மதனகலாவின் குளுகுளு சிரிப்பும்..! தேனியில் பரபரப்பான நிகழ்வு
முன்னதாக, சமாதானப் பேச்சுக்களுக்கு உக்ரைன் தயாராக இருப்பதாகவும் ஆனால் இடத்தை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்று உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி
கூறினார். ஆனால், ரஷ்யாவோ பெலாரஸில் இடம் குறித்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி, எங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் வேண்டுமானால், வார்சா(போலந்து), இஸ்தான்புல் (துருக்கி), பாகு (அஜர்பைஜான்) ஆகிய நகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷ்யாவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.