திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைனில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 16-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 4 நாட்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
எனவே இலவச தரிசன டிக்கெட் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு இருப்பிடம் வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திருமலையில் உள்ள ஓட்டல்களை மூடப்படுவதால் பக்தர்களுக்கு உணவு இன்றி தவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
இதே நிலை நீடித்தால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சமையல் பாத்திரங்களுடன் திருமலைக்கு வர வேண்டிய நிலை ஏற்படும்.
இலவச தரிசனம் டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் மறுநாளே சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு சேவை வழங்க வேண்டிய தேவஸ்தானம் சேவை டிக்கெட்டுகளை ஏலம் விட்டு வருகிறது. ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை அதிகரிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்… நீதிமன்ற விசாரணைக்கு பயந்து மனைவி, மகள்களுடன் ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை